science

img

அறிவியல் கதிர்

♦ சுறா மீனின் கன்னிப் பிரசவம் 
அமெரிக்காவில் ஷெட் எனும் மீன் காட்சி சாலையில் ஒரு வரிக்குதிரை சுறாமீன் ஆண் வழி இல்லாமல் குஞ்சுகளை பொரித் துள்ளது. சில பெண் விலங்குகள் தன்னுடைய மரபணுப் பொருட்களா லேயே கரு முட்டையை கருவுறச் செய்து குட்டிகளை கன்னிப்பிரவச மாக உண்டாக்குகின்றன. இந்த முறை பர்தெனோஜெனிசிஸ்(parthenogenesis) என்றழைக்கப்படுகிறது. நட்சத்திர மீன்கள், ஆழ்கடல் புழுக்கள் போன்ற விலங்குகளில் கலவியில்லா இனப்பெருக்கம் சாதாரணமாக காணப்படுகிறது. ஆனால் முதுகெலும்பு இனங்களில் அது மிகவும் அரிதாம்.

♦ பூமியில் சூரியன்கள் சாத்தியமா?
அமெரிக்க லாரென்ஸ் லிவர்மோர் சோதனைக்கூடத்தில் லேசர் கதிர்களை பயன்படுத்தி அணுச்சேர்க்கையின் மூலம் மின் ஆற்றல் உண்டாக்கப்பட்டுள்ளது.ஹைடிரஜனின் ஐசோடோப்புகளான டியூட்டிரியம், டிரிட்டியம் ஆகியவற்றை லேசர் கதிர்கள் கொண்டு பற்ற வைக்கும்போது வெளிவரும் ஆற்றல், லேசர் கதிர்கள் மூலம் உட்செலுத்திய ஆற்றலைவிட குறைவு. ஆகவே ஆற்றலை உண்டாக்கிவிட்டோம் என்கிறார்கள். லேசர் கதிர்களை தயாரிக்க செலவிட்ட ஆற்றலையும் சேர்த்துக் கொண்டால் கிடைத்த ஆற்றல் எதிர்மறையே.  லேசர் கதிர்கள் அல்லாமல் மின்காந்தத்தை பயன்படுத்தி ஆற்றலை உண் டாக்கும் அணுச்சேர்க்கை முறை டோகமாக்ஸ் (Tokamaks) எனப்படுகிறது. இதில் சீனாவின் EAST என்பது முன்னணியில் இருப்பதாக தோன்றுகிறது.அதற்கடுத்தாற் போல் ஐரோப்பாவின் JET உள்ளது.இந்தியாவும் பங்கெடுக்கும் ITERஎனும் பன்னாட்டு திட்டம் 2025இல் பயன்பாட்டிற்கு வர உள்ளது. அது அணுச்சேர்க்கை யின் மூலம் சக்தியை 2035இல் தான் உருவாக்கும். அது ஏற்கனவே தெரிந்த தொழில்நுட்பமே; புதிய ஆய்வுக் கூறுகள் இல்லை. எனவே அதிலும் மின் ஆற்றல் கிடைக்காது. அது ஒரு புறம் இருக்க அணுச்சேர்க்கை மூலம் சூரியனும் மற்ற நட்சத்திரங்களும் ஆற்றலை எளிதாக உண்டாக்குகின்றன.நம்மால் ஏன் முடிவதில்லை? சூரியனிலும் மற்ற நட்சத்திரங்களிலும் புவிஈர்ப்பு விசை மிக அதிகம்.அதனால் ஹைடிரஜனை மிக எளிதாக அழுத்திவிடுகின்றன.பூமியில் அந்த அளவு புவிஈர்ப்பு விசை இல்லை.எனவே நாம் மின்காந்த சக்தி அல்லது லேசர்கள் கொண்டு அதை சாதிக்கிறோம். இந்த முறையில் ஒரு வினாடிக்கு பத்துமுறை லேசர் கதிர்களை செலுத்த வேண்டும். ஒரு நாளுக்கு ஒரு மில்லியன் உருண்டைகள்(பெல்லட்டுகள்) தேவைப்படும். தொழில்நுட்பத்தில் அசாதாரணமான இவற்றோடு இதற்கு ஆகும் பொருட் செலவையும் சேர்த்துப் பார்க்கும்போது இது சாத்தியமா என்கிறார் பீப்பிள்ஸ் டெமாகரசி கட்டுரையாளர் பிரபிர் புர்காயஸ்தா. புதிப்பிக்கதக்க ஆற்றல்களான சூரிய சக்தி போன்றவற்றையும் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவதுமே படிவ எண்ணெய் பயன்பாட்டை குறைத்து புவி வெப்பமாதல், சுற்றுசூழல் மாசடைதல் ஆகியவற்றை தவிர்ப்பதற்கான வழிகள் என்கிறார் அவர்.

♦மாசகற்றும் மறு சுழற்சி 
பெல்ஜியம் நாட்டிலுள்ள ஒரு சுய உதவிக்குழு மனித மயிரை ஒரு இயந்திரத்தின் உதவியினால் சதுர விரிப்புகளாக மறு சுழற்சி செய்துள்ளது. இவை எண்ணெய்,கரிமப் பொருட்களை உறிஞ்சப் பயன்படும். இந்தப் பாய்களை உயிரி பைகளாகவும் மாற்றலாம். இந்த விரிப்புகளை வடிகால்கால்வாய்களில் பொருத்தி நதிகளில் விடப்படும் நீரிலுள்ள மாசுப் பொருட்களை உறிஞ்சலாம்.

♦அரிதான விண்வெளி நிகழ்வு 
28.12.22 அன்று அரிதான விண்வெளி நிகழ்வாக இரவு வானில் எல்லா கோள்களையும் ஒன்று சேர பார்க்க முடிந்தது. வீனஸ்(சுக்ரன்),மெர்குரி(புதன்), சாட்டர்ன்(சனி),ஜுபிடர்(குரு) மற்றும் மார்ஸ்(செவ்வாய்) ஆகியவற்றை வடகோளத்தில் வெறும் கண்ணாலேயே பார்க்க முடிந்ததாம். யுரேனஸ் மற்றும் புளுட்டோவை பைனாக்குலரில் பார்க்கும்போது சிறப்பாக தெரிந்ததாம். எல்லாக் கோள்களும் ஒன்றுக்கொன்று 1.5டிகிரி இடைவெளியில் தோன்றின. 

♦ சின்னதாய் சில செயல்கள்! பெரிதாய் பலன்கள்! 
அன்றாடம் உடற்பயிற்சி செய்ய இய லாதவர்கள் நடையின் வேகத்தை அதிகரிப்பது போன்ற செயல்களை சில நொடிகள் தீவிரமாக செய்தால் உடற்பயிற்சி யின் மூலம் கிடைக்கும் நலன்களைப் பெற லாம் என்கிறது ஒரு ஆய்வு. டிசம்பர் 8ஆம் தேதியிட்ட ‘nature science’ இதழில் இந்த ஆய்வறிக்கை வந்துள்ளது. ஓய்வு நேரத்தில் உடற்பயிற்சி செய்யாத 25000 நபர்கள் இந்த சோதனையில் ஈடுபட்டார்கள்.ஒன்று அல்லது இரண்டு நொடிகள் தீவிரமான செயல் ஒன்றை மூன்று முறை செய்தவர்களுக்கு இறப்பு ஆபத்து அவ்வாறு செய்யாதவர்களை விட 40% குறைவானது தெரியவந்தது. தினசரி ஓடுவது,பயிற்சிக் கூடங்களுக்கு செல்வது,பொழுதுபோக்கு சைக்கிள் ஓட்டுவது ஆகிய உடற்பயிற்சி செய்பவர்கள் 62000 நபரின் இறப்பு விகிதம் குறைவானதும் இதே அளவுதான்.‘சிறிய அளவு செயல்கள் கூட நலம் பயக்கக்கூடியவை என்று பல ஆய்வுக் கட்டுரைகள் கூறுயுள்ளன. இந்த ஆய்வும் அதையே காட்டுகிறது. ‘நேரம்,பணம்,ஆர்வமின்மை,போக்குவரத்து ஆகியவற்றால் பலர் மலைத்து போய் உடற்பயிற்சி செய்வதில்லை. நம்மால் முடிந்தவற்றை செய்வது பயனுள்ளது என்பதே இந்த ஆய்வு சொல்லும் செய்தி’ என்கிறார் விஸ்கான்சின் மாடிசன் பல்கலைக் கழகத்தை சேர்ந்த உடல்செயல் நோயியலாளர் லிசா கட்மஸ்- பெர்டரம்.இவ்வாறு வேகமாக செய்யகூடிய அன்றாட செயல்பாடுகள் பல உள்ளன.நமது நடையின் வேகத்தை ஒன்று அல்லது இரண்டு நொடிகள் அதிகப்படுத்துவது;பலசரக்குப் பைகளை காரில் கொண்டு போய் வைப்பது;படிகளில் ஏறுவது போன்றவை.

♦வேளாண் கழிவு வீணாவதா?
‘பெண்கள் வேளாண் கழிவு’ எனும் தொடக்க நிறுவனத்தை 11 கல்லூரிப் பெண்கள் இணைந்து அமைத்துள்ளனர். மத்தியப் பிரதேசம் உஜ்ஜயின் நகரக் கல்லூரி ஒன்றில் இதை தொடங்கி யுள்ளனர். இதில் வேளாண் கழிவுகளிலிருந்து புதிய பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. சோயா பீன் தாள், பூக்கள் ஆகியவை வீணாக்கப்படுகின்றன.அவற்றிலிருந்து ஊதுபத்திகள் தயாரிக்கிறார்கள்.வரக்கூடிய காலங்களில் பல புதிய பொருட்களை தயாரிப்போம் என்கிறார் அந்தக் குழுவிலுள்ள ஒரு மாணவர்.​​​​​​​

 

;